×

தமிழகத்தில் பா.ஜ எத்தனை தொகுதிகளில் போட்டி?: வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

நாகர்கோவில்: அகில இந்திய பா.ஜ மகளிரணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் நேற்று நாகர்கோவிலில் அளித்த ேபட்டி: பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விசாரணை முடிந்து தண்டனை கிடைப்பதில் காலதாமம் ஏற்பட்டு வருகிறது. தண்டனை விரைவில் கிடைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். பா.ஜ ஆளும் மாநிலங்களில் தண்டனை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரிய ஆட்களாக இருந்தாலும் சட்ட நடவடிக்கை வேகமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் கூட்டணி முடிவு ஆகிவிட்டது. ஆனால் பா.ஜ எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என மேலிடம்தான் முடிவு செய்யும். நான் போட்டியிடுவது பற்றியும் மேலிடம்தான் முடிவு செய்யவேண்டும். தென்இந்தியாவில் பா.ஜ வேகமாக வளர்ந்து வருகிறது. தெலங்கானாவில் தற்போது டிஆர்எஸ், பா.ஜ என்ற நிலை வந்துள்ளது. ரஜினி சிறந்த நடிகர், ஆன்மிகவாதி. அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் என்றார்..Tags : constituencies ,BJP ,interview ,Tamil Nadu ,Vanathi Srinivasan , How many constituencies will BJP contest in Tamil Nadu ?: Vanathi Srinivasan interview
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தின் 4...