×

மது குடித்தபோது தகராறு நண்பரை கொன்று சடலத்துடன் ஒரு வாரம் தங்கியிருந்த வாலிபர்: மேலும் 2 பேரை கொலை செய்தது அம்பலம்

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த சின்னராசு என்பவர் சிக்கன்னா கல்லூரி எதிரே ஒரு வீட்டை வாடகைக்கு விட்டு இருந்தார். கடந்த 3ம் தேதி அந்த வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக தகவலறிந்து வடக்கு போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது, தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய  நிலையில் ஆண் சடலம் கிடந்தது.  விசாரணையில் கொலையானவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி (31) என்ற கூலித் தொழிலாளி என்பது தெரிந்தது. அவருடன் தங்கியிருந்தவரும், வேறு ஒரு கொலை விவகாரத்தில் சிறையிலிருப்பவருமான சங்கர் (30) என்பவரை போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது இசக்கியை அவர் ெகாலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

நண்பர்களான இருவரும் மது அருந்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. சங்கர் ஆத்திரத்தில் இசக்கியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து, தண்ணீர் தொட்டிக்குள் சடலத்தை போட்டுவிட்டு, அங்கேயே ஒரு வாரமாக தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.மேலும் சங்கர் அனுப்பர்பாளையம் பகுதியில் 2018ல் ஒருவரையும், கடந்த மாதம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த பாக்கிய அன்பரசன் (44) என்பவரையும் தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளார். இசக்கி கொலையில் போலீசார் சந்தேகப்பட்டு விசாரித்தபோதுதான் 3 பேரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.Tags : teenager ,murder , Dispute while drinking alcohol Killing a friend with a corpse Valipar who stayed for a week: Murder of 2 more people exposed
× RELATED உல்லாச வாலிபர் கைது