நிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

சென்னை: புயல் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம்  தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த  பிரதமர் மோடி, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்றிரவு 9 மணிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அதையடுத்து தமிழ்நாட்டிற்குத் தேவையான உதவிகளை செய்வதாகவும் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

Related Stories:

>