ஆக்ஸ்போர்டு தடுப்பூசி உலகளவில் பரிசோதனை

லண்டன்: லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனிகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த, ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி, இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பரிசோதிக்கப்பட்டது. இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோசிக்கும்  3ம் கட்ட ஆய்வில், 2 டோஸ் மருந்து எடுத்துக் கொண்டவர்களுக்கு 62% அளவுக்கே பலன் அளிப்பதாக தகவல்கள் வெளியாகின. இது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனால், இந்த மருந்தின் தரம் குறித்து ஆ்ய்வு செய்யும்படி , தனது நாட்டு மருந்து ஒழுங்குமுறை ஆணையத்துக்கு இங்கிலாந்து அரசு  உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ‘தங்களின் மருந்து 90% செயல்திறனை கொண்டது.   உலகளவில் மீண்டும் அது கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்,’ என   அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் நேற்று அறிவித்தது. அமெரிக்காவில் தனி ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும், அதன் முடிவுகள் சாதகமாக இருக்கும் எனவும் அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Stories: