×

மம்தா பானர்ஜியுடன் மோதல் மேற்கு வங்க அமைச்சர் திடீர் ராஜினாமா

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக,  அமைச்சர் சுவேந்து ஆதிகரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.மேற்கு வங்க மாநில போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் சுவேந்து ஆதிகரி. கடந்த சில நாட்களாக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியுடன் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  இதனால், சுவேந்து விரைவில் பாஜவுக்கு கட்சி தாவ இருப்பதாக தகவல்கள் வந்தன. இதனை மம்தா மறுத்தார்.

இந்நிலையில் ,தனது அமைச்சர் பதவியை சுவேந்து நேற்று திடீரென ராஜினாமா செய்தார். முதல்வர் மம்தாவுக்கு  அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா  செய்துள்ளேன். இதை உடனே  ஏற்றுக் கொள்ள வேண்டும்.’ என கூறியுள்ளார்.பீகார் சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பாஜ தற்போது தனது கவனத்தை அடுத்தாண்டு தேர்தலை  சந்திக்கும்  மேற்கு வங்கத்தின் மீது  திருப்பி உள்ளது. இதற்கான பிரசாரத்தையும் ஏற்கனவே தொடங்கி விட்டது. மேலும், திரிணாமுல்லை பலவீனப்படுத்துதவற்காக  அக்கட்சி தலைவர்களுக்கு வலை வீசி வருகிறது. அதில் சிக்கிதான், சுவேந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என திரிணாமுல் குற்றம்சாட்டி உள்ளது.Tags : West Bengal ,minister ,Mamata Banerjee , Conflict with Mamta Banerjee West Bengal minister resigns
× RELATED மேற்குவங்கத்தில் 200 சீட் இலக்கு நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை