×

கண்ணாடி வழியாக ஜாலம் விண்வெளி வீரர் எடுத்த பூமியின் அழகிய வீடியோ

வாஷிங்டன்: ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி நிறுவனத்தின் டிராகன் ரெசிலியஸ் விண்கலத்தின் மூலம் நாசா விண்வெளி வீரர்கள் 4 பேர் சமீபத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர். அவர்களில் ஒருவரான விக்டர் கிளோவர், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தபடி பதிவிட்ட அவரது முதல் டிவிட்டர் பதிவு பெரும் வைரலாகி உள்ளது.

விண்வெளி ஆய்வு மையத்தின் கண்ணாடி ஜன்னல் வழியாக அவர், பூமியின் அழகிய நீலத் தோற்றத்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதோடு, ‘இந்த வீடியோ அற்புதமான அழகாக இருக்கிறது என்று வர்ணிப்பு மட்டும் போதாதுங்க’ என விக்டர் பேசி உள்ளார். அவரது வீடியோவில் பூமியின் தோற்றம் கண்களுக்கு விருந்தளிக்கும் அற்புதம் என பலர் வர்ணிக்கின்றனர்.Tags : astronaut ,Earth , Illusion through glass Taken by the astronaut Beautiful video of the earth
× RELATED காணொளி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது