பிஞ்ச் 5000

*  ஆஸ்திரேலிய வீரர்களில் குறைந்த ரன்னில் 5000 ரன் எட்டிய வீரர்கள் பட்டியலில் பிஞ்ச் நேற்று 2வது இடம்  பிடித்தார்.  ஆட்டத்தின் 6வது ஓவரில்   13 ரன்னை தொட்டபோது அவர் இந்த  சாதனையை படைத்தார். 126* இன்னிங்சில் விளையாடி 5000 ரன் கடந்துள்ளார். வார்னர் 119* இன்னிங்சில் கடந்து முதலிடம் வகிக்கிறார்.

* இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா அதிக ரன் குவித்த ஒருநாள் போட்டியாக இதுஅமைந்தது. 2019ல் மொகாலியில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன் குவித்ததே முந்தைய அதிகபட்ச ரன் குவிப்பாகும்.  தென்ஆப்ரிக்கா 2015ல் 4 விக்கெட் இழப்புக்கு 438 ரன் குவித்ததே இந்தியாவுக்கு எதிராக எதிரணி எடுத்த அதிகபட்சமான ரன் (மும்பை).

* ஒரே அணிக்கு எதிராக அதிக முறை 150 ரன் எட்டிய பெருமை பிஞ்ச்-வார்னர் ஜோடிக்கு கிடைத்துள்ளது. இவர்கள் இந்திய அணிக்கு எதிராக 4 முறை 150+ ரன் விளாசியுள்ளனர். இலங்கைக்கு எதிராக 3முறை 150 ரன்னை எட்டிய ரோகித் - கோஹ்லி 2வது இடத்திலும்,   ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 முறை 150 ரன் சேர்த்த ரோகித் - தவான் இணை 3வது இடத்திலும் உள்ளது.

* ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் நேற்றைய போட்டியில் இரு அணிகளும் சேர்த்த  682 ரன்,  2வது அதிகபட்சமாகும். இதற்கு முன்பு 2015ல் ஆஸ்திரேலியா (382), இலங்கை (312) அணிகள் எடுத்த 688 ரன் முதல் இடம் வகிக்கிறது.

* ஹர்திக் 1000: ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக  1000 ரன் மைல்கல்லை எட்டிய வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா 5வது இடம் பிடித்தார்.

Related Stories:

>