×

திருவண்ணாமலை தீபத்திருவிழா - கொரோனாவால் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு

தி.மலை: திருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதுகாப்பு கருதி வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

28, 29, 30ஆம் தேதிகளில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். பக்தர்களின் வருகையை கண்காணிக்க 15 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் உள்ளே பக்தர்களுக்கு அனுமதி இல்லை:

நவம்பர் 29ஆம் தேதி திருவண்ணாமலை தீபத்திருவிழா அன்று கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நவம்பர் 29-ஆம் தேதி காலை 04.00 மணிக்கு கோயிலுக்குள் பரணி தீபமும், மாலை 06.00 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத்திருவிழா அன்று மலை மீது பக்தர்கள் செல்லவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக சாமி வீதியுலா நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : Thiruvannamalai Fire Festival ,Collector ,Corona ,devotees , Thiruvannamalai
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...