புயல் பாதித்த பகுதிகளை தேர்தல் வருவதால்தான் முதல்வர் ஆய்வு செய்கிறார் : துரைமுருகன் குற்றச்சாட்டு

வேலூர், வேலூரில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அளித்த பேட்டி :புயல் காரணமாக கடலூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வாழை, நெல் உள்ளிட்ட பல ஏக்கர் பயிர்கள் பாதித்துள்ளது. உரிய முறையில் கணக்கிட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். கடந்த வாரம் அமித்ஷா வந்து பேசியபோது, தமிழகத்திற்கு ஏதோ அதிகளவில் கொடுத்துள்ளதை போன்று தெரிவித்தார்.

தற்போதைய புயல் பாதிப்புக்கு தமிழகத்திற்கு என்னதான் செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

தற்போதைய ஆட்சியில் உள்ளவர்கள் பொய் பேசுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். எந்த மழை வெள்ளத்துக்கும் வெளியே வந்து பார்வையிடாத தமிழக முதல்வர், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போது கடலூர் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

Related Stories:

>