×

தமிழகத்தில் திட்டமிட்டபடி எங்களது வேல் யாத்திரை வரும் 5ம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் : டெல்லி சென்ற பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி!!

புதுடெல்லி,:மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்து சென்றதை தொடர்ந்து இன்று  பாஜ மாநில தலைவர் எல்.முருகன் திடீரென விமானம் மூலம் அவசர பயணமாக டெல்லி சென்றார். அங்கு அவர் அவர் பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்த முக்கிய ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதையடுத்து நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தேசிய பொதுச்செயலாளராக சி.டி.ரவி இன்று பதவியேற்றுக் கொண்டார்.அவரது வழிகாட்டுதலின் பேரில் தமிழகத்தில் பாஜ கட்சியாது இன்னும் சிறப்பாக செயல்படும். ஏனெனில் மாநிலத்தின் பொறுப்பாளராக இருந்த அனுபவம் அவருக்கு அதிகம் உண்டு. மேலும் தமிழகத்தில் திட்டமிட்டபடி எங்களது வேல் யாத்திரை வரும் 5ம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும்.

அப்போது அங்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. புயல் காரணத்தினால் தற்போது வேல் யாத்திரையானது இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளத
இது தமிழக முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நிவர் புயல் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திட்டமிட்டு அருமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு என்பது பாஜ கட்சியின் டெல்லி தலைமை தான் இறுதி முடிவை செய்யும். அதன் வழிகாட்டுதலின் படி நாங்கள் செயல்படுவோம். பிரதமர் மோடி தமிழகம் வருவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. மேலும் வேல் யாத்திரை தொடர்பான வழக்கை நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : L Murugan ,pilgrimage ,Tamil Nadu ,Vail ,Thiruchendur ,Delhi ,BJP , Tamil Nadu, Vel Yatra, Thiruchendur, Delhi, BJP, Leader, L. Murugan
× RELATED மகளிர் சுய உதவிக்குழுவுக்கு...