மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஆய்வு குழு முடிவு செய்யும் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பெரம்பூர், :சென்னை மாநகராட்சி, திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி, எஸ்.எஸ்.புரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நேற்று மாலை அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தமிழகத்தில் நிவர் புயலினால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழு சேத விவரங்களை கணக்கிட அரசு சார்பில் நியமிக்கப்பட்டு உள்ளது. அக்குழு பாதிக்கப்பட்ட மக்கள், மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஆய்வு குழு முடிவு செய்யும

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மழைநீர் வெளியேற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் எங்கும் மழைநீர் தேங்கவில்லை. ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீரும் 2 மணி நேரத்தில் அகற்றப்படும் என்றார்.

Related Stories:

>