×

நிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது...மின் துறையில் சேத மதிப்பு ரூ.15 கோடி... : அமைச்சர் தங்கமணி பேட்டி

நாமக்கல் : நிவர் புயலின் சேத மதிப்பு ரூ.15 கோடி என்று இதுவரை கணக்கிடப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கமணி, நிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது.நிவர் புயலால் 2,488 மின் கம்பங்கள் சேதம், மின்னல் தாக்கி 108 மின்மாற்றிகள் பாதிப்பு. நிவர் புயலால் மின்துறையில் ஏற்பட்ட சேத மதிப்பு இதுவரை ரூ.15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் முழுமையாக மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது.இனிவரும் காலங்களில் புயல், மழையால் பாதிக்காத வகையில், புதைவட மின்கம்பிகள் அமைக்கப்படும். சென்னையில் 95% மின் இணைப்பு தரப்பட்டுவிட்டது, என்றார்.

முன்னதாக, அமைச்சர் தங்கமணி சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:‘நிவர்’ புயலின்போது மின்வாரியம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, உயிரிழப்புகள் ஏதும் ஏற்படா
மல் மக்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளனர்.கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்தது. புயல் வேகத்தை விட மின்வாரியம் வேகமாக செயல்பட்டதால், கடலூர் மாவட்டத்தில் வெறும் 28, விழுப்புரம் மாவட்டத்தில் 20 பீடர்களில் மட்டுமே இன்னும் மின்இணைப்பு கொடுக்க வேண்டி உள்ளது.சென்னையைப் பொறுத்தவரை பெரும்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால், அங்கு முழு அளவில் மின்விநியோகம் செய்ய முடியவில்லை. மின்வாரியமும், மாநகராட்சியும் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளன. தண்ணீர் குறையக் குறையபடிப்படியாக மின்சாரம் வழங்கப் படும், என்றார்.


Tags : government ,Tamil Nadu ,storm ,Nivar ,Thangamani , Nivar storm, Government of Tamil Nadu, Electricity Department, damage value, Minister Thangamani
× RELATED விரைவில் குணமடைந்து சசிகலா தமிழகம்...