×

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 375 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி

சிட்னி: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 375 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா அணிநிர்ணயித்தது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில்  இந்திய அணி முதலில் பந்து வச்சியது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய  ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்  ஆரோன் பிஞ்ச் 114 ரன்களும்,  ஸ்டீவன் ஸ்மித் 105 ரன்களும் , டேவிட் வார்ன் 69 ரன்களும், க்ளென் மேக்ஸ்வெல் 45 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Tags : Australia ,victory ,India , Australia set a target of 375 for victory in the first ODI against India
× RELATED சிராஜ், தாகூர் வேகத்தில் சரிந்தது...