தமிழக அரசின் எதிர்ப்பை மீறி 2வது முறையாக பேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல் வழங்கியது உச்சநீதிமன்றம்!!

புதுடெல்லி,: பேரறிவாளனனுக்கு ஒரு வாரம் வழங்கிய பரோல் வரும் 30ம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், மேலும் 1 வாரம் பரோல் நீட்டித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கின் பின்னணி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கு பேட்டரி நான் வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான ஒரு ஆதாரத்தை கூட சிபிஐ தரப்பில் இதுவரை கொடுக்கப்படவில்லை. அதனால் இந்த வழக்கில் எனக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது ஏன் என கேள்வியெழுப்பியதோடு, வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பதாகவும், அப்போது பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்வதில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்து விரிவான இறுதி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து அவரது பரோலை ஒரு வாரம் நீட்டித்து கடந்த 23ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

இந்த நிலையில் பேரறிவாளன் தரப்பில் ஆஜரான பிரபு நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், வழக்கில் பேரறிவாளனுக்கு நீதிமன்றம் வழங்கிய பரோல் நீட்டிப்பு என்பது வரும் 30ம் தேதியோடு முடிவடைகிறது. இதில் தமிழகத்தில் தற்போது புயல்,வெள்ளம் ஆகிய பாதிப்புகள் இருப்பதால் அவரது மருத்துவை சிகிச்சை இன்னும் முழுமையடையவில்லை. அதனால் பரோலை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையில் அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசின் எதிர்ப்பை மீறி 2வது முறையாக  பேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல் வழங்க தமிழக சிரைத்துறைக்கு உத்தரவிட்டனர்.அத்துடன், பேரறிவாளனுக்கு பரோல் காலம் மேலும் நீட்டிக்கப்படாது என்பதையும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனைக்காக மேலும் 2 வாரம் பரோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>