×

நகை பிரியர்களுக்கு ஜாக்பாட் : ஆபரணத் தங்கத்தின் விலை 5வது நாளாக சரிவு.. சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.36,608க்கு விற்பனை!!

சென்னை : கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்த நிலையில் இந்த வாரம் தொடர்ந்து 5 நாட்களாக‌ தங்கம் விலை குறைந்ததால் சவரன் ரூ.36,608க்கு விற்பனையாகிறது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து தங்கம் விலை இறங்குமுகமாகவே இருந்து வருகிறது.

இந்தநிலையில் 5வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 குறைந்து ரூ.4576 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.296 குறைந்து ரூ.36,609-க்கு விற்பனையாகிறது.சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.64,40க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கத்தில் விலை நான்காவது நாளாக குறைந்ததால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.

Tags : lovers , Jewelry, gold, falling prices, shaving
× RELATED தகாத உறவை கண்டித்ததால் ஆத்திரம் காதலர்களுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி