×

சுவீடன் இளவரசருக்கு கொரோனா பாதிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஸ்டாக்ஹோம் : சுவீடன் இளவரசர், இளவரசிக்கு  கொரோனா உறுதியானதாக அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.கொரோனா உறுதியாகியுள்ள இளவரசர் கார்ல் ஃபிலிப்(41) மற்றும் இளவரசி சோபியா(35) ஆகியோருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.மன்னர், ராணி மற்றும் பட்டத்து இளவரசி விக்டோரியா உட்பட அரச குடும்பத்தினர் அனைவரும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராணியின் சகோதரர் இறுதிச்சடங்களில் அரச குடும்பத்தினர் அனைவரும் கலந்துக்கொண்டதால் அவர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இறுதி சடங்கில் கலந்துக்கொண்ட மற்றவர்கள் அனைவருக்கும் நடத்தப்பட்டசோதனையில் கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.

தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இளவரசர் கார்ல் பிலிப், இளவரசி சோபியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Corona ,announcement ,Swedish ,prince , Sweden's Prince Carl Philip , test positive , corona case
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...