ரூ.15 கோடி செல்போன் கொள்ளையில் திரிபுராவை சேர்ந்தவர் கைது

ஓசூர்: காஞ்சிபுரத்தில் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரியை வழிமறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் ஒரு கும்பல் மடக்கி, 2 டிரைவர்களை தாக்கி விட்டு, செல்போன்களை கொள்ளையடித்து சென்றது. இதில், மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித்ஜான் ஜா தலைமையிலான கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. தனிப்படையினர் ம.பி சென்று பரத் தேஜ்வாணியை(37) கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், மேற்கு திரிபுராவில் பதுங்கியிருந்த அமிதாபா தத்தா(36) என்பவன் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளான். மற்றவர்களை தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். விரைவில் கொள்ளை போன செல்போன்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>