×

வேளாண் பல்கலை ஆன்லைன் கலந்தாய்வு துவங்கியது

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 14 உறுப்பு கல்லூரிகள், 28 இணைப்பு கல்லூரிகள் உள்ளது. இந்த கல்லூரிகளில் 2020-2021 கல்வியாண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. நடப்பாண்டில், 4,390 இடங்கள் உள்ளன. இதற்கு மொத்தம் 48,820 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த மாதம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தரவரிசை பட்டியலில் மொத்தம் 31,410 மாணவர்கள் இடம்பெற்றனர். இதில் பொதுப்பிரிவுக்கான இட ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. நிவர் புயல் காரணமாக குறைந்த அளவிலான மாணவர்களே பங்கேற்றனர். மொத்தம் 2,318 பங்கேற்று தங்களுக்கு விரும்பிய பாடங்கள் மற்றும் கல்லூரியை தேர்வு செய்தனர். தொடர்ந்து கலந்தாய்வு வரும் டிசம்பர் 1ம் தேதி வரை நடக்கிறது.


Tags : Agricultural University Online Consultation , Agricultural University Online Consultation Launched
× RELATED புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு