×

காற்றுடன் கூடிய கனமழைக்கு 387 மரங்கள் விழுந்தன 288 மின் கம்பங்கள் சாலையில் சாய்ந்தன

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் அதிக கனமழை பெய்து. இதனால் புறநகர் பகுதிகளான முடிச்சூர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் தண்ணீரில் முழ்கின. மேலும் நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் அதிக வேகத்தில் காற்று வீசியது. இதனால் சென்னையில் 387 மரங்கள் விழுந்தன. இவற்றை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இதைப்போன்று 288 மின் கம்பங்களும் விழுந்தன. இவற்றை அகற்றும் பணயில் மின் வாரியம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்ட காரணத்தால் அடையாறு கரையின் ஓரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதன்படி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு கொரோனா அறிகுறி சோதனை செய்யப்பட்டது. இதில் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Tags : road , 387 trees fell due to heavy rain with wind and 288 power poles tilted on the road
× RELATED வெட்டிய மரங்களுக்கு அஞ்சலி