×

நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு என 204 புறநகர் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதில், பெண்கள், தேர்வுக்கு செல்பவர்கள், மாணவர்கள், வியாபாரம் செய்யும் பெண்கள் என அனைவரும் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிவர் புயல் காரணமாக பயணிகள் ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. புயல் பாதிப்பு இல்லாத மாவட்டங்களுக்கு ஒரு சில ரயில்கள் இயக்கப்பட்டன. அதன்படி, நேற்று முன்தினம் காலை 10 மணி வரைக்கும் சில மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால், அதில் வழக்கத்திற்கு மாறாக பயணிகள் கூட்டம் இல்லை. இந்நிலையில், நிவர் புயல் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மரக்காணம் - புதுச்சேரி இடையே கரையை கடந்ததால் நேற்று வழக்கம் போல் 3 மணி நேரத்திற்கு பிறகு மின்சார ரயில்கள் இயக்கப்படும், என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், அரக்கோணம் - சென்னை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, செங்கல்பட்டு - சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையே ஒரு மணி நேரத்திற்கு ஒரு சிறப்பு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று இயல்வு வாழ்க்கை திரும்பி அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்படும் பட்சத்தில் ஏற்கனவே இயக்கப்பட்ட 204 சிறப்பு மின்சார ரயில்களும் இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Hurricane Nivar ,Southern Railway , Suburban trains canceled due to Hurricane Nivar resume operation: Southern Railway notice
× RELATED கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்கள்...