×

சீனாவை கண்காணிக்க அமெரிக்க டிரோன்கள்: வாடகைக்கு எடுத்தது இந்தியா

புதுடெல்லி: சீனா, பாகிஸ்தானை கண்காணிப்பதற்காக அமெரிக்காவிடம் இருந்து 2 அதிநவீன டிரோன்களை இந்தியா வாடகைக்கு எடுத்துள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவும், ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு நெருக்கடியை கொடுத்து வருகின்றன். கிழக்கு லடாக்கில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சீனா ராணுவத்தை இந்திய ராணுவம் தடுத்தபோது நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இந்திய வீரர்கள் நடத்திய  தாக்குதலில் 40 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லடாக் எல்லையில் இருநாட்டு ராணுவமும் தலா 50 வீரர்களை குவித்துள்ளதால் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இதை தணிப்பதற்காக இருதரப்பும் இதுவரையில் 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. அதில், படைகளை வாபஸ் பெறுவதற்காக முடிவு எட்டப்பட்டதாக இருதரப்பும் கூட்டறிக்கை வெளியிட்ட போதிலும், இதுவரையில் வீரர்கள் வாபஸ் பெறப்படவில்லை. அதே நேரம், சீன ராணுவத்தின் நடமாட்டத்தை கடல் பகுதியிலும், லடாக் நிலப் பகுதியிலும் இந்திய ராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதற்காக, கடல் பகுதிகளை கண்காணிப்பதற்காக அமெரிக்காவிடம் இருந்து எம்.க்யூ-9பி என்ற அதிநவீன டிரோனை இந்தியா ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்துக்கு இம்மாத தொடக்கத்தில் இந்த டிரோன்கள் வந்து சேர்ந்தன. இதேபோல், பி-81 என்கிற டிரோனும் பாகிஸ்தானை கண்காணிப்பதற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

Tags : US ,China ,India , US drones to monitor China: Rented by India
× RELATED சீனாவின் டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு நிரந்தர தடை