சொல்லிட்டாங்க...

* `விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு வேளாண் சட்டங்களால் ஏதாவது பாதிப்பு உண்டானால் அரசியலை விட்டு விலகுவேன். அதனால் அப்பாவி விவசாயிகளை தூண்டுவதை நிறுத்தி கொள்ளுங்கள். - அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்

* மின்வாரியம் தனியாரிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் இன்டர்வியூ நடத்த சொல்லியிருக்கிறோம். - மின்துறை அமைச்சர் தங்கமணி.

* கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்கத் தேவையான உதவிகளையும், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்.

* நாட்டின் விவசாயிகள் தங்களுக்கு எதிராக மோடி அரசு இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து உறுதியுடன் போராடுகின்றனர். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

Related Stories:

>