பட்டாபிராமில் 30 மணி நேர மின்தடை

பட்டாபிராம்: ஆவடி மின்வாரிய கோட்டத்தில் பட்டாபிராம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் “நிவர்” புயலை முன்னிட்டு மின்தடை செய்யப்பட்டது. மேலும், புயல் கரையை கடந்த பிறகு, மின் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். ஆனாலும், நேற்று காலை முதல் மாலை வரை மின் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். மேலும், மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன்பிறகு, அப்பகுதி மக்கள் போராட்டம் செய்வதாக அறிவிப்பு கொடுத்தனர். இதனையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு நேற்று இரவு 7 மணி அளவில் அனைத்து பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்தனர்.

Related Stories:

>