×

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாப சாவு

ஆவடி: ஆவடி அடுத்த கொள்ளுமேடு, ஆர்ச் அந்தோணி நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர், லாரி டிரைவர். இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகன் மோகன்ராஜ் (6). இவன், வெள்ளானூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தான். இதற்கிடையில், கமலகண்ணன் வீட்டருகில் ஒரு புதிதாக வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டி மூடாமல் திறந்து வைத்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால் கழிவுநீர் தொட்டி முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை மோகன்ராஜ் வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தான். பின்னர், அவன் திடீரென்று புதிதாக கட்டிய பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளான்.

அங்கு உள்ள கழிவுநீர் தொட்டியில் தேங்கிய தண்ணீரில் மோகன்ராஜ் தவறி விழுந்துள்ளான். இதனை அப்போது யாரும் கவனிக்கவில்லை. பின்னர், சிறிது நேரம் கழித்து தாய் சங்கீதா, மோகன்ராஜை தேடி உள்ளார். அப்போது அவன் கழிவுநீர் தொட்டியில் தண்ணீரில் உயிருக்கு போராடி கொண்டிருந்தான். இதனையடுத்து, அவனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மோகன்ராஜ் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். புகாரின் பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : death , The tragic death of a 6-year-old boy who fell into a sewer
× RELATED கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி