திமுக எம்எல்ஏ நிவாரண உதவி

காஞ்சிபுரம்: நிவர் புயல், நேற்று அதிகாலையில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடந்தது. இதனால், பல்வேறு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து, காஞ்சி வடக்கு ஒன்றியம் கீழ்அம்பி கிராமத்தில், நிவர் புயல் காரணமாக பாதிப்படைந்த நரிக்குறவர்கள் 75 க்கும் மேற்பட்டோருக்கு பழம், பிஸ்கட், பிரட் உள்ளிட்ட உணவு பொருள்களை திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் எம்எல்ஏ வழங்கினார். தொடர்ந்து, கனமழை பலத்த காற்று காரணமாக காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 100 க்கும் மேற்பட்டோருக்கு உணவு பொருட்களை வழங்கினார். அப்போது, மாவட்ட திமுக அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், நகர அவைத்தலைவர் சந்துரு உள்பட பலர் இருந்தனர்.

Related Stories:

>