×

அகமது படேல், தருண் கோகாய் இறுதிச்சடங்கு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரும், எம்பி.யுமான அகமது படேல், கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் குர்கிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடைய சடலம், குஜராத் மாநிலம், பரூச் மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த கிராமமான பிரமானில், அவரின் பெற்றோரின் சமாதிக்கு அருகே  நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். அதேபோல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், அசாம் முன்னாள் முதல்வருமான தருண் கோகாய் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள நபகிருகாவில் அவருடைய இறுதிச்சடங்கு, முழு அரசு மரியாதையுடன் நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

Tags : Ahmed Patel ,Tarun Gokhale Funeral , Ahmed Patel, Tarun Gokhale Funeral
× RELATED காரியக் குழு கூட்டத்தில் தீர்மானம்...