×

2 டோஸ் பெற்றவர்களுக்கு 62% மட்டுமே பலன் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பில் குளறுபடி: ஆக்ஸ்போர்டு, அஸ்ட்ரா ஜெனிகா திடீர் அறிவிப்பு

லண்டன்: தனது கொரோனா தடுப்பு மருந்தான ‘கோவிஷீல்டு’, மனிதர்களின் நடத்தப்பட்ட பரிசோதனையில் 62 சதவீதம் மட்டுமே பலனளிப்பதாக அஸ்ட்ரா ஜெனிகா தெரிவித்துள்ளது. உலகம் முழுவதையும் ஆட்டி படைக்கும் கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனிகா, ஆக்ஸ்போர்டு நிறுவனங்கள் இணைந்து, ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளன. இவற்றை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

இந்த மருந்தை 3வது மற்றும் இறுதிக்கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட இருந்த நிலையில், முதல் மற்றும் 2ம் கட்டத்தில் மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக சமீபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இதன் இறுதிக்கட்ட பரிசோதனை உலகம் முழுவதும் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் சீரம் நிறுவனமும் இந்த மருந்தை தான் தன்னார்வலர்களுக்கு செலுத்தி, பரிசோதித்து வருகிறது. இதன் விரைவில் 4 கோடி டோஸ்கள் வரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியும் நாளை இந்த நிறுவனத்துக்கு சென்று தடுப்பூசி மருந்து தயாரிப்பின் நிலவரத்தை அறிய உள்ளார்.

இந்நிலையில், இந்த மருந்தால் போதிய பலன் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இது பற்றி அஸ்ட்ரா ஜெனிகா நேற்று வெளியிட்ட அறிக்கையில், `கொரோனா தடுப்பு மருந்து ஆய்வு முடிவில், தடுப்பூசி வழங்கப்பட்ட தன்னார்வலர்களில் ஒரு டோஸ் மருந்தளவு எடுத்து கொண்டவர்களிடம் 90 சதவீதமும், 2 மருந்தளவு கொடுக்கப்பட்டவர்களுக்கு 62 சதவீதமும் பலன் அளிப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம், ஒரு டோஸ் மருந்தளவு எடுத்தவர்களே அதிக பாதுகாப்புடன் உள்ளனர். இதனால், மருந்து தயாரிப்பில் ஏதோ தவறு நடந்துள்ளதாக தெரிகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், மருத்துவ நிபுணர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஒரு டோஸ் மருந்தளவு எடுத்து கொண்டவர்களிடம் 90 சதவீதமும், 2 மருந்தளவு கொடுக்கப்பட்டவர்களுக்கு 62 சதவீதமும் பலன் அளிப்பது தெரிய வந்துள்ளது.


Tags : announcement ,AstraGenica ,Oxford , Only 62% benefit from 2 dose recurrence Covshield vaccine mess: Oxford, AstraGenica sudden announcement
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...