×

சில்லி பாயின்ட்…

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வேகப் பந்துவீச்சாளர்கள் பூம்ரா, ஷமி இருவரையும் மாற்றி மாற்றி களமிறக்கி அவர்களுக்கு போதுமான ஓய்வு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கிரண் மோர் வலியுறுத்தி உள்ளார்.
* தளர்வுகளுடன் கூடிய தனிமைப்படுத்தல் முடிவடைந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் ’பயோ பபுள்’ பாதுகாப்பான சூழலுடன் கூடிய புதிய ஓட்டலுக்கு மாறியுள்ளனர்.
* ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் விதிக்கப்பட்ட தடை நீங்கியுள்ள நிலையில், வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரளா கிரிக்கெட் சங்கத்தின் பிரெசிடென்ட் கோப்பை டி20 தொடரில் களமிறங்க உள்ளார்.
* நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
* சமீபத்தில் காலமான ஆஸி. அணி முன்னாள் நட்சத்திரமும் வர்ணனையாளருமான டோன் ஜோன்சுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.

Tags : Roulette Point
× RELATED சில்லி பாயின்ட்…