ஐஎஸ்எல் தொடரில் முதல்முறையாக களமிறங்கும் ஈஸ்ட் பெங்கால்

பன்ஜிம்: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் முதல்முறையாக எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி இன்று களமிறங்குகிறது. இந்தியாவில் பழமையான கால்பந்து கிளப்களில் ஒன்று ஈஸ்ட் பெங்கால். சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு 1920ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் பிரபலமான கால்பந்து கிளப்களான ஈஸ்ட் பெங்கால்-மோகன் பகான் போட்டிகள் அனல் பறக்கும். இரண்டு கொல்கத்தாவை சேர்ந்த அணிகள் என்றாலும் ரசிகர்களிடம் மோதலுக்கு பஞ்சமிருக்காது. இதில் மோகன் பகான் கடந்த ஆண்டு ஐஎஸ்எல் அணியான அத்லெடிகோ டி கொல்கத்தா (ஏடிகே) உடன் இணைந்து விட்டது. அதனால் ஏடிகே மோகன் பகான் என்ற பெயரில் ஐஎஸ்எல் தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், எஸ்சி ஈஸ்ட் பெங்கால் இந்த ஆண்டுதான் ஐஎஸ்எல் தொடரில் இணைந்துள்ளது. தனது முதல் போட்டியிலேயே தனது பரம எதிரியான மோகன் பகானை எதிர்கொள்ள உள்ளது. இன்று வாஸ்கோவில் இந்தப் போட்டி நடக்கிறது. ஐஎஸ்எல் அணிகளில் குறைந்த அளவு வெளிநாட்டு வீரர்கள் கொண்ட அணியாகவும் ஈஸ்ட் பெங்கால் அணி இருக்கிறது. இரு அணிகளும் கடைசியாக விளையாடிய 45 போட்டிகளில் 18 போட்டிகளில் ஈஸ்ட் பெங்காலும், 14 போட்டிகளில் மோகன் பகானும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 13 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. ஐஎஸ்எல் தொடரை பொறுத்தவரை அனுபவ அணி ஏடிகே மோகன் பகானும், அறிமுக அணி எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியும் முதல்முறையாக மோதும் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: