கொரோனா விதிமீறல் அபராதம் இ-பரிவர்த்தனை செய்ய வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

புதுடெல்லி: தலைநகரில் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடுத்த வக்கீல் ஒருவர், தனது மனுவில், மாதிரி சோதனைகளை அதிகரிக்க அரசுக்கு உத்தரவிடும்படி குறிபிட்டு இருந்தார். அது தொடர்பான நேற்று நடைபெற்ற விசாரணையில், நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, சுப்ரமண்யம் பிரசாத் ஆகியோர் கூறுகையில், ‘‘திருமணங்களில் 50 பேருக்கு மேல் கும்பல் கூடக் கூடாது எனும் கொரோனா விதியை அரசு எப்படி கண்காணிக்கிறது. இதற்காக எதாவது குறிப்பிடத்தக்க நடைமுறையை உருவாக்கி கண்காணிக்கிறீர்களா’’, எனக் கேள்வி எழுப்பினர்.

அதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: கொரோனா விதிமீறலுக்காக வசூலிக்கும் கோடிக்கணக்கான அபராத தொகையை எந்த கணக்கில் இருப்பு வைக்கிறீர்கள்? கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அந்த ரொக்கத்தை செலவிடுவது உகந்தது. கொரோனா விதிமீறலுக்கு விதிக்கும் அபராதத்தை ரொக்கமாக கையாளவது ஆபத்தானது. தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும். அபராத தொகையை ஆன்லைனில் செலுத்த அறிவுறுத்த வேண்டும். அதற்கான வசதியை அரசு இதுவரை ஏற்பாடு செய்திராவிட்டால், உடனடியாக போர்ட்டல் தொடங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Related Stories: