என்டிஎம்சி சார்பில் “பேஸ் மாஸ்க்” வங்கி சாதர் பஜாரில் திறப்பு

புதுடெல்லி: மக்களுக்கு முககவசங்களை இலவசமாக வழங்கும் வகையில், மத்திய டெல்லியின் சாதர் பஜார் பகுதியில் பேஸ் மாஸ்க் வங்கயை வடக்கு மாநகராட்சியின்(என்டிஎம்சி) மேயர் திறந்து வைத்தார். டெல்லியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் வேளையில், முககவனம் அணிவதை கட்டாயமாக்கி ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டத. அதோடு, கோவிட் தடுப்பு விதிகளை மீறுவோருக்கானஅபராதத்தொகையை 500 லிருந்து 2000 ஆக அதிகரித்தது. இதையடுத்து, மக்களுக்கு இலவச முககவசங்களை வழங்க என்டிஎம்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக முதல்கட்டமாக நகரின் முக்கிய இடங்களில்  பேஸ் மாஸ்க் வங்கியை என்டிஎம்சி நிர்வாகம் திறந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, நேற்று மத்திய டெல்லியின் சதார் பஜார் பகுதியில் பேஸ் மாஸ்க் வங்கியை என்டிஎம்சி மேயர் ஜெய் பிரகாஷ் திறந்து வைத்தார்.

இதபற்றி என்டிஎம்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  வடக்கு மாநகராட்சியும், டெல்லி  போலீசாரும் இணைந்து பாராக் துடி சவுக் பகுதியில் மாஸ்க் வங்கியை திறந்துள்ளனர். முககவசம் தேவைப்படுவோர் இங்குள்ள மாஸ்க் வங்கியில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.  அதோடு, முககவசங்களை இலவசமாக வழங்க விருப்பமுள்ளவர்களும் நன்கொடையாக வழங்கலாம். எங்களது நோக்கம், கோவிட் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவது தான். எனவே, என்டிஎம்சியின் 104 வார்டுகளிலும் இதுபோன்ற மாஸ்க் வங்கியை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: