குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி தொற்று மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை: அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: “குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி தொற்று மேலும் பரவாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: நிவர் புயலால் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை ராட்சத குழாய்கள் மூலம் அகற்றுவதற்கு தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்தில், தற்போது கோரதாண்டவம் ஆடிய நிவர் புயலால் மீனவ மக்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். எனவே, குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி தொற்று மேலும் பரவாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க  வேண்டும். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: