×

ஆவின் மற்றும் தனியார் பால் தட்டுப்பாடு

சென்னை: நிவர் புயல் மரக்காணம்- புதுச்சேரி இடையே புதன்கிழமை இரவு 11 மணியளவில் கரையை கடந்தது. அதிக காற்று, மழை பெய்யகூடும் என்பதால் மக்கள் அதிகாலை முதலே பால் பாக்கெட்டுகள் வாங்க காத்திருந்தனர்.

ஆனால் ஆவின் பால் வாடிக்கையாளர்களுக்கு கடைகளில் பால் பாக்கெட்டு இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்கி சென்றனர். அதுவும் சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தது. இதனால் நேற்று சென்னையில் ஆவின் மற்றும் தனியார் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.Tags : Shortage of spirits and private milk
× RELATED அணைகள் நிரம்பியுள்ளதால் கோடையில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது