×

நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட தாம்பரம்-ஐதராபாத் ரயில்கள் மீண்டும் இயக்கம்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பத்தில் இருந்து ஐதாராபாத்துக்கு இடையே நேற்று மாலை 5.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் (02759) மற்றும் 22ம் தேதியன்று மாலை 6.30 மணியளவில் ஐதராபாத்தில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (02760) நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த இரண்டு ரயில்களும் ஏற்கனவே அறிவித்திருந்த அட்டவணைப்படி இயக்கப்பட்டது. அதைப்போன்று சென்னை சென்ட்ரல்-மங்களூர் சிறப்பு ரயில் (02601), சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா (02639) சிறப்பு விரைவு ரயில்கள் வழக்கமான நேரத்திலும், ஈரோடு ரயில் நிலையம் வரை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஆலப்புழா-சென்னை சென்ட்ரல் சிறப்பு விரைவு ரயில் (02640) ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை அட்டவணை நேரப்படி இயக்கப்பட்டது.Tags : Tambaram ,Hyderabad ,storm ,Nivar , Stopped due to Nivar storm Tambaram-Hyderabad trains resume operation
× RELATED சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில்...