×

புயல் பாதித்த கடலூர் பகுதியில் உதவ அவிநாசியில் இருந்து 50 பேர் பயணம்

அவிநாசி: நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு களப்பணியாற்ற அவிநாசியில் இருந்து 50 பேர் நேற்று மாலை கடலூர் புறப்பட்டுச் சென்றனர். தமிழகத்தில் ஏற்பட்ட நிவர் புயலால் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்து மக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டோருக்கு களப்பணி மற்றும் உதவி செய்ய கடலூர் மாவட்டத்துக்கு அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து உதவி பொறியாளர் பழனிசாமி, செயல் அலுவலர்கள் பிரதீப்குமார், சுந்தரம் தலைமையில் 50 பேர் நேற்று மாலை இரண்டு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதில், 3 சூபர்வைசர்கள், 4 ஒர்க் இன்ஸ்பெக்டர்கள், திருப்பூர் மாவட்டத்தில் 16 பேரூராட்சியில் பணியாற்றும் 43 துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 50 பேர் அடங்குவர்.

Tags : area ,Avinashi ,Cuddalore , Nivar storm, Erode weekly market, cows
× RELATED திருவில்லிபுத்தூர் அருகே மழைநீர்...