வலுவிழந்த நிவர் புயல்..!! இன்று மதியம் 3 மணி முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கும்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் புறநகர் சிறப்பு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நிவர் புயல் காரணமாக நேற்று காலை 10 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று மதியம் 3 மணிக்கு மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்காக சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. ஆனால், நிவர் புயல் காரணமாக, பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை புறநகர் ரயில் சேவை இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என்றும், இரவு 8 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் என இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செங்கல்பட்டு வரை இன்று பிற்பகல் 3 மணி முதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இரு மார்க்கங்களில் புறநகர் ரயில் சேவை துவங்குகிறது. சென்னை சென்ட்ரல் - கூடூர் ரயில் மார்க்கத்தில் உள்ள அத்திப்பட்டு புதுநகர் - அத்திப்பட்டு ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், வருகிற 2020 நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: