×

அடுத்தடுத்து வரும் முகூர்த்த நாட்கள் குண்டுமல்லி கிலோ ரூ.1600 ஆக உயர்வு

சேலம்: சேலத்தில் அடுத்தடுத்து வரும் முகூர்த்த நாட்களால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ குண்டுமல்லி கிலோ ₹1600க்கு விற்கப்படுகிறது. சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டுமல்லி, ஜாதிமல்லி, கனகாம்பரம், சாமந்தி, சம்பங்கி, அரளி, சம்பங்கி உள்பட பலவகையான பூச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சேலம் சுற்று வட்டார பகுதிகளில் பறிக்கப்படும் பூக்கள் சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டுக்கும், இதைதவிர பெங்களூர், கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பூ மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (26ம் தேதி) மற்றும் நாளை (27ம் தேதி) என இரு நாட்கள் முகூர்த்தங்கள் வருகிறது. இதன் காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ குண்டுமல்லி (மொத்த விலையில்) ₹1,600 என உயர்ந்துள்ளது. சன்னமல்லி ₹1000, ஜாதிமல்லி ₹600, காக்காட்டான் ₹600, அரளி ₹300 வெள்ளை அரளி ₹300, மஞ்சள் அரளி ₹300, செவ்வரளி ₹300, நந்தியாவட்டம் ₹500, சம்பங்கி ₹180, சாமந்தி ₹220, பன்னீர்ரோஸ் ₹140, பட்டுரோஸ் ₹100, ஒரு தாமரை பூ ₹10 என விலை உயர்ந்துள்ளது.

Tags : Subsequent, auspicious days, saffron, Rs.1600, hike
× RELATED நூல் விலையை குறைக்க வலியுறுத்தல்