×

சந்தோஷ மழையில் நகையும் நகைபிரியர்கள்: சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.36,856-க்கு விற்பனை.!!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 4-வது நாளாக குறைந்து வருகிறது. உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யும் வகையில் தங்களின் கவனத்தை தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து வருகிறது. இருப்பினும் இம்மாதம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து மாற்றம் கண்டு வருகின்றது.
 
வாரத்தின் முதல் நாளான கடந்த 23-ம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.37,984-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, 24-ம் தேதி சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கும், 25-ம் தேதி ரூ.360 குறைந்து ரூ.36,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும் 4-வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ஒரு கிராம் ரூ.4,607-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.36,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் தங்கம் விலை உயர்ந்த நிலையில், இந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து 4-வது நாளாக குறைந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Jewelers ,Chennai , Jewelers joking in the rain of happiness: Gold razor in Chennai fell by Rs 56 to Rs 36,856. !!!
× RELATED தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் 28.5...