×

கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் விற்பனைக்கு குவிப்பு

சேலம்: கார்த்திகை தீபத்தையொட்டி, சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் பலவிதமான அகல் விளக்குகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப நாளில் வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்நாளில் சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடக்கும். சிவன் கோயில்களில் அன்று மாலை அகல் விளக்குகள் வைத்து, கல்தூணில் மகாதீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தப்படும். இதை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோயில்களுக்கு வருகை தருவார்கள். நடப்பாண்டு கார்த்திகை தீபம் வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் அகல்விளக்குகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அகல் விளக்கு வியாபாரிகள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். நடப்பாண்டு கார்த்திகை தீப திருவிழா வரும் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒரு முகம், ஐந்து முகம் கொண்ட விளக்கு, மேஜிக் விளக்கு, குபேர விளக்கு, பிரதோஷ விளக்கு, தட்டு விளக்கு, ரங்கோலி விளக்கு, ஓம் விளக்கு, ஸ்வதிக் விளக்கு, கற்பக விருட்சக விளக்கு உள்பட பல விதமான விளக்குகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. மண் விளக்கு ஒரு ரூபாய் முதல் ₹50 வரை, டெரகோட்டா விளக்கு ₹5 முதல் ₹200 வரை விற்பனைக்கு உள்ளது,’’ என்றனர்.

Tags : Akal ,Karthika , Karthika lamp, Akal lamps, for sale, concentrate
× RELATED பாஜவின் 10 ஆண்டு ஆட்சியில் நாடு எந்த...