உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சுற்றறிக்கை: சர்வதேச விமான போக்குவரத்துக்கு நவ.31-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

சென்னை: கொரோனா தடுப்புப்பணிக்காக சர்வதேச விமான போக்குவரத்து தடை உத்தரவு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. சில முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு அனுமதியுடன் விமான சேவை தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக மார்ச் முதல் சர்வதேச விமான போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சரக்கு விமானங்கள் மற்றும் சிறப்பு விமானங்கள் சேவை மட்டும் தொடர்ந்து இயங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மார்ச் 23ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இது ஒவ்வொரு கட்ட ஊரடங்கு மற்றும் தளர்வுகளின் போதும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு இந்திய விமான ஆணையத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து துறை இயக்குநரகம் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை வரும் நவம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு சரக்கு விமானங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட விமானங்களுக்கு பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு கோரிக்கையின் பேரில் குறிப்பிட்ட வழித்தடங்களில் சர்வதேச விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

Related Stories: