திருமணத்திற்காக மதம் மாறினால் கலெக்டர் அனுமதி தேவை :உ.பி-யில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல்

லக்னோ,:கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் ‘லவ் ஜிஹாத்‘துக்கு எதிரான அவசர சட்டத்துக்கு உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த சில ஆண்கள் மற்றொரு மதத்தை சேர்ந்த பெண்களை ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் காதல் வலையில் விழவைத்து அவர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்வதாக உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. காதலின் பெயரால் கட்டாய மதமாற்றத்தை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும் என்று உத்தர பிரதேசமுதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கெனவே அறிவித்தார். இதுதொடர்பாக அவசர சட்டத்தை உருவாக்க அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

அதன்படி, மாநில சட்டக் கமிஷன் புதிய மசோதா தயாரித்து அரசுக்கு அனுப்பியது. இதன் அடிப்படையில் திருமணத்திற்காக கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் ‘லவ் ஜிஹாத்’துக்கு எதிரான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல்செய்யப்பட்டு மசோதா நிறை வேறியபின் முறைப்படி சட்ட மாக்கப்படும் என்று தெரிகிறது.

இதன்படி, மதம் மாறி திருமணம் செய்து கொள்ள விரும்புவோர், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பே தகவல் அளிக்க வேண்டும். அவரின் அனுமதி கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம். அதை மீறி திருமணம் செய்து கொண்டால், ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: