தானே... வார்தா.. ஒக்கி.. கஜா... தமிழகத்தை தாக்கிய முக்கிய புயல்கள்

சென்னை, :தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வட கிழக்கு பருவமழை காலத்தில் மழை பெய்வது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும், காற்றழுத்தம், புயல்கள் தான் பெரு மழையைக் கொண்டு வருகின்றன. இதனால் தான் போதிய அளவுக்கு மழை நீர் கிடைத்து நீர்த் தேக்கங்கள் நிரம்ப காரணமாக அமைந்துவிடுகிறது. அதனால்தான் குடிநீர் உள்ளிட்ட பஞ்சம் ஏற்படாமல் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தை பல்வேறு பெரும் புயல்கள் தாக்கி பெரும்சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. அவை நீங்காத வடுக்களாக இன்றும் இருக்கின்றன.

அந்த வகையில் இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் விவரம்:

* கடந்த 2010ம் ஆண்டு தென் சீனக் கடல் பகுதியில் உருவாகி மேற்கு திசையில் நகர்ந்து வந்த காற்றழுத்தம், இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்து வங்கக் கடலுக்கு தாவியது. அது பின்னர் பெரும் புயலாக உருவெடுத்தது. அதற்கு ‘ஜல்’ என்று பெயர் வைத்தனர். அந்த புயல் நவம்பர் 6ம் தேதி மணிக்கு 111 கிமீ வேகத்தில் சென்னையை கடந்து சென்றது. இந்த புயலின் தாக்கத்தினால்  சுமார் 60 பேர் இறந்தனர்.

 * 2011ம் ஆண்டு வங்கக் கடலில் உருவானதான் ‘தானே’புயல். இது பின்னர் அதி தீவிரப் புயலாக மாறி, கடலூரை ஒட்டிய பகுதியில் கரையைக் கடந்தது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமானது.

* 2012ம் ஆண்டு வங்கக் கடலில் உருவான புயல் தான் ‘நீலம்’ புயல். இது முதலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி பின்னர் புயலாக மாறியது. இந்த புயல் கரையைக் கடக்கும் போது, கடல் நீர் பல ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது.

 * 2013ம் ஆண்டு வங்கக் கடலில் உருவானதான் ‘மடி’ புயல். இது வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. இந்த புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும், சில ஆயிரம் ஏக்கர் பயிர் நாசமானது.

* 2016ம் ஆண்டு வங்கக் கடலில் ரோனு, கியாந்த், நடா என்று வரிசையாக புயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தாலும் இவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் இவற்றுக்கு பிறகு டிசம்பர் மாதம் வந்த   ‘வார்தா’ புயல், அதி தீவிர புயலாக மாறி, டிசம்பர் 12ம் தேதி சென்னை வழியாக கரையைக் கடந்தது. இந்த புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்–்களில் பல ஆயிரக் கணக்கில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இவற்றை அகற்றவே ஒரு மாதம் ஆனது. 15க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இந்த புயலால் ஏற்பட்ட சேத மதிப்பு ரூ.1000 கோடி என்று மதிப்பிடப்பட்டது. இந்த புயல் சென்னை நகரை ஸ்தம்பிக்க வைத்தது.

 * 2017ம் ஆண்டு இலங்கை அருகே வடக்கு இந்திய பெருங்கடலில் உருவானதுதான் ‘ஒக்கி’ புயல். இது நவம்பர் 30ம் தேதி 185 கிமீ வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்டது. கேரளாவும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. எண்ணிக்கை இல்லாத அளவுக்கு மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து போர்களம் போல காட்சி அளித்தது. போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல ஆயிரம் ஏக்கர் பயிர் பாதிப்பு ஏற்பட்டது. 300க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். 650க்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போனார்கள். இந்த புயலால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது மட்டும் அல்லாமல், இலங்கை, கேரளா பகுதிகளும் பாதிக்கப்பட்டன.

* 2018ம் ஆண்டு வங்கக் கடலில் உருவான முதல் புயல் என்று பார்த்தால் ‘கஜா’ புயல்தான். இதன்ால் ஏற்பட்ட சேதம்,பாதிப்பு இன்னும் நீடிக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் இன்னும் அந்த சோகத்தில் இருந்து மீ்ண்டு வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு இந்த கஜா புயல் ஒரு கோரத்தாண்டவத்தை நடத்திவிட்டு சென்றது. இதனால் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்–்கள் பாதிக்கப்பட்டன என்றாலும், கடலூர் மாவட்டத்தை பற்றி சொல்லத் தேவையில்லை. இயற்கை வளங்கள், பல ஆயிரம் தென்னை மரங்கள், பயிர்கள் சேதம் அடைந்தன. தென்னை மரங்களை இலவசமாக மக்கள் கொடுத்தனர். 60 பேர் இந்த புயலால் உயிரிழந்தனர். கோழிகள், பறவைகள், உள்ளிட்டவை முதல் முறையாக இந்த புயலில்தான் இறந்ததாக கூறப்பட்டது. 86 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன. இந்த புயலால் பல ஆயிரம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நின்றனர். பலர் வீடுகளை இழந்தனர்.

* தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று 2019ம் ஆண்டு  புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘ஃபனி’ என்று பெயரிடப்பட்டது. இது வலுப்பெற்று சூறாவளிப் புயலாக மாறி வட மேற்கு திசையில் நகர்ந்து வந்து சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதியில் நிலை கொண்டு பின்னர் தெற்கு ஆந்திராவில் கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரிய அளவில்பாதிப்பு இல்லைஎன்றாலும், செ்ன்னையில் மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் கடுமையான போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: