சென்னையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு: நிவாரண உதவிகளை வழங்குகிறார்.!!!

சென்னை: சென்னையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். நேற்று முன்தினம் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக  உலுப்பெற்றது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்கிடையே, நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. தீவிர புயலாக மாறியுள்ள நிவர் அடுத்த 6 மணி  நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

நிவர் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையில் பல குடியிருப்புகள் மழைநீரில் மூழ்கின. சென்னையின் தாழ்வான பகுதிகளான கிழக்கு தாம்பரம், வேளச்சேரி, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி  குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து, ஒவ்வொரு வீடும் தனித்தனி தீவாக காட்சியளித்தன. நிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 100 கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இந்நிலையில், திமுக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார். தற்போது, சென்னை சைதாப்பேட்டையில் வெள்ள பாதிப்புகளை தற்போது ஆய்வு செய்து வரும் மு.க.ஸ்டாலின், அடுத்ததாக கே.கே.நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார்.

ஆய்வு செய்யும் மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளை கேட்டறிந்து நிவாரண உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மு.க.ஸ்டாலினுடன் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் உடனிருந்தனர். தற்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரமணி பெரியார் நகர், பாரதி நகர், வேளச்சேரி பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

 

Related Stories: