அதி தீவிரத்தில் இருந்து தீவிர புயலாக மாறியுள்ள நிவர் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்: வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்

சென்னை:  புதுச்சேரி - மரக்காணம் இடையே நிவர் புயல் முழுமையாக கரையை கடந்தது என்று வானிலை மைய இயக்குனர் கூறியுள்ளார். நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது என்று பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். தீவிர புயலாக மாறியுள்ள நிவர் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். நிவர் புயல் வலு குறைந்ததை அடுத்து படிப்படியாக தமிழகத்தில் மழை குறையும் என்றும் வானிலை மைய இயக்குனர் தகவல் வெளியிட்டுள்ளார். தற்போது நிலப்பகுதியில் புயல் உள்ளதால் வட தமிழகத்தில் கனமழை மற்றும் காற்று நீடிக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதி தீவிர புயலாக இருந்த நிவர், தற்போது தீவிர புயலாக வலுவிழந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலின் மையப்பகுதி கரையை கடந்ததை அடுத்து சுற்றியுள்ள மேகக் கூட்டங்களும் கரையை கடந்து வருகிறது. வலு குறைந்த நிவர் புயல் வடமேற்கில் நகர்ந்து ஆரணி, வேலூர் நோக்கி செல்கிறது. மரக்காணம் அருகே கரையை கடந்த  நிவர் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கும்.

Related Stories:

>