×

அடுக்குமாடி சுற்றுச்சுவர் சரிந்தது

ஆலந்தூர்: செம்பரம்பாக்கம் ஏரியில்  உபரி நீர் திறந்து விடப்பட்டதால் மணப்பாக்கம் வழியாக செல்லும் அடையாறு ஆற்றில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகிறது.  இதனால் ஆற்றங்கரையோரம் குடியிருப்போர்  வெளியேற்றப்பட்டனர்.  இந்நிலையில் நேற்று மாலை ஆற்றங்கரையை ஒட்டியுள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் சுற்றுச்சுவர் மொத்தமாக சரிந்தது.  இந்த கட்டிடத்துக்குள் ஆற்றுநீர் புகுந்தது. தகவலறிந்த அதிகாரிகள்  விரைந்து சென்று அங்கிருந்தவர்களை வெளியேறும்படி கேட்டுக் கொண்டனர்.


Tags : apartment , The perimeter wall of the apartment collapsed
× RELATED கோயிலுக்கு சொந்தமான இடம்...