×

தீயணைப்புத்துறை இயக்குனர் பேட்டி: புயல் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் வீரர்கள்

சென்னை: மாமல்லபுரம் தீயணைப்பு துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை தீயணைப்பு துறை இயக்குனர் ஜாபர் சேட் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி, “செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் சாலையில் மரம் விழுந்தால் அவற்றை அகற்ற 16 மரம் வெட்டும் இயந்திரம், 2 ஜெனரேட்டர் இயந்திரம், மழை நீர் வெளியேற்ற மோட்டார் பம்ப், எமர்ஜியன்சிலைட், டார்ச் லைட், கயிறு மற்றும் பாதுகாப்பு கவசம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது. மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்ககளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புயல் கரையை கடக்கும் போது யாரும் வெளியே வரக்கூடாது. கொள்ளலாம்”

Tags : Fire Department: Veterans ,storm rescue missions , Interview with the Director of the Fire Department: Veterans preparing for storm rescue missions
× RELATED தமிழக அரசு எதில் வெற்றி நடை போடுகிறது...