சென்னை விமான நிலையம் மூடல்: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை:  கடந்த 2015 ஆண்டு பெருமழை, வெள்ளத்தினால் டிசம்பர் 1ம் தேதி நள்ளிரவில் முன்னறிவிப்பு இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரி திறந்ததால் அடையாறில் வந்த வெள்ளம் திடீரென சென்னை விமான நிலைய ஓடுபாதையில் புகுந்தது. இதனால் 2015ம் ஆண்டு 5 நாட்கள் விமான நிலையம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று செம்பரம்பாக்கம் ஏரி  திறந்துவிடப்பட்டது. இதனால் கடந்த 2015ம் ஆண்டு நிலை மீண்டும் விமான நிலையத்துக்கு வரக் கூடாது என்று பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  சென்னை விமான நிலையம் நிவர் புயல் காரணமாக நேற்று இரவு 7 மணியிலிருந்து இன்று காலை 7 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளாது.

நிவர் புயல் ஆபத்தை சமாளிக்கவும், செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுவதால் விமானநிலைய ஓடுபாதைகளில் புகும் ஆபத்து இருப்பதாலும் அதனால் இன்று காலை வரையில் தற்காலிகமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் கூறினர்.

Related Stories: