சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி ( தமிழக காங்கிரஸ் தலைவர்): காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளராக பணியாற்றி, உறுதுணையாக இருந்த மூத்த தலைவர் அகமது படேல் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இன்று ஒரு சோகமான நாள். திருநாவுக்கரசர் (காங்கிரஸ் எம்பி): இந்திய அரசியலில் சாணக்கியராக பொது தொண்டிலும் அரசியலிலும் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சிய அரசியல் விற்பன்னர் அகமது படேல். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் ஆழ்ந்த அனுதாபங்கள்.