×

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி ( தமிழக காங்கிரஸ் தலைவர்): காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளராக பணியாற்றி, உறுதுணையாக இருந்த மூத்த தலைவர் அகமது படேல் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இன்று ஒரு சோகமான நாள். திருநாவுக்கரசர் (காங்கிரஸ் எம்பி): இந்திய அரசியலில் சாணக்கியராக பொது தொண்டிலும் அரசியலிலும் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சிய அரசியல் விற்பன்னர் அகமது படேல். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): அகமது படேல் மறைவு, காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் அன்போடும், நட்ேபாடும், பழகக்கூடியவர். காதர் மொய்தீன்( இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்): அகமது படேல் மரணமுற்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் கொள்கை அவருக்குப் பிடித்தமானது. அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

Tags : Ahmed Patel ,Congress ,death ,leaders ,party , Congress senior leader Ahmed Patel's death: Political party leaders mourn
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்