×

சிறார்களின் வழக்குகளை விசாரிக்க 23 இடத்தில் காணொலி காட்சி வசதி: முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை: சிறார்களின் வழக்குகளை விசாரிக்க 23 இடத்தில் காணொலி காட்சி வசதி முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசினர் கூர்நோக்கு இல்லங்களில் தங்கியுள்ள சிறார்களின் வழக்கு விசாரணைகளை காணொலி காட்சி மூலமாக மேற்கொள்வதற்கு வசதியாக திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள 16 இளைஞர் நீதி குழுமங்கள், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கடலூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உள்ள 6 அரசினர் கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் வேலூரில் உள்ள ஒரு அரசினர் பாதுகாப்பு இடம், என மொத்தம் 23 இடங்களில் 2 கோடியே 60 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் எல்காட் நிறுவனத்தின் மூலமாக அமைக்கப்பட்டுள்ள காணொலிக் காட்சி வசதிகளை துவக்கி வைத்தார்.

Tags : places ,Chief Minister , Video facility at 23 places to investigate juvenile cases: Chief Minister initiated
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்